For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”குளிருது டார்ஜிலிங்... குவியுது கூட்டம்”- மீண்டும் சூடுபிடிக்கும் சீசன்...

Google Oneindia Tamil News

டார்ஜிலிங்: டார்ஜிலிங்கில் ‘குளுகுளு' சீசன் ஆரம்பித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும்.

ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன் நிலவிய தனி மாநிலப் பிரச்சினைகளில் டார்ஜிலிங் தன்னுடைய சுற்றுலா முக்கியத்துவத்தை இழந்திருந்தது. அரசியல் கொந்தளிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அங்கு வெகுவாகக் குறைந்தது.

இயற்கையின் கருணை:

இயற்கையின் கருணை:

அதனை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக மாற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சிக்கு இந்த ஆண்டு இயற்கையின் கருணையும் கிட்டியுள்ளது.

திரும்ப கிடைத்த ஆனந்தம்:

திரும்ப கிடைத்த ஆனந்தம்:

கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அங்கு மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சொர்க்கலோகம் டார்ஜிலிங்:

சொர்க்கலோகம் டார்ஜிலிங்:

பொதுவாக ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மத்தியில் முடியும் சுற்றுலா பருவம் இந்த ஆண்டு பனிப்பொழிவை முன்னிட்டு தற்போதே தொடங்கியுள்ளது.

தொடரும் பனிப்பொழிவு:

தொடரும் பனிப்பொழிவு:

கடந்த ஞாயிறன்று ஜோர்பங்ளோ பகுதியில் உள்ள டைகர் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த பனிப்பொழிவினால் இரண்டு அங்குல உயரத்திற்கு அங்கு பனி படர்ந்து காணப்பட்டது.

வெயில் ஓடி போயாச்சு:

வெயில் ஓடி போயாச்சு:

கடந்த சில நாட்களாக 3-4 டிகிரி செல்சியஸ் அளவிலேயே காணப்பட்ட வெப்பநிலை நேற்று 8 டிகிரி என்ற அளவில் உயர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

பொழியட்டும் பனிமழை:

பொழியட்டும் பனிமழை:

எனினும் நேற்று இரவு அதிகரித்த பனிப்பொழிவினால் வெப்பம் 2 டிகிரியாகக் குறைந்தது மட்டுமின்றி டார்ஜிலிங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் பனிப்பொழிவு குறித்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The snow fall season started again in Darjeeling after a long time ago. The number of visitors to Darjeeling will be go up by this season change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X