For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பாரத் மாதா கி ஜெய்' முழக்கத்தை எழுப்ப தாருல் உலூம் தியோபந்த் தடை- பத்வா விதிப்பால் சர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை எழுப்ப இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் பத்வா மூலம் தடை விதித்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் எழுப்ப வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

Darul Uloom Deoband issues fatwa against chanting Bharat Mata ki Jai

மகாராஷ்டிரா சட்டசபையில் பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை எழுப்ப மறுத்த மஜ்லிஸ் எம்.எல்.ஏ. சஸ்பென்ட் செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 26ம் தேதி பாரத் மாதா கி ஜெய் என கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த், பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்ப பத்வா மூலம் தடை விதித்தது. இஸ்லாத்தில் அல்லாவைத் தவிர வேறு எவரையும் போற்றுவதற்கு இடமில்லை எனவும் அந்த அமைப்பு கூறியிருந்தது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் இது குறித்து கூறுகையில், தேசியவாத முழக்கத்தை மதவாதமாக்குகிறது தாருல் உலூம் தியோபந்த்... ஜாவேத் அக்தர், ஏ.ஆர். ரஹ்மான் என பல இஸ்லாமியர் பாரத் மாதா கி ஜெய் என முழங்கும் போது இவர்கள் ஏன் தயங்குகின்றனர் என்றார்

சிவசேனாவின் சஞ்சய் ரவுத், பாரத் மாதா கி ஜெய் என தாய்நாட்டை போற்றி முழக்கம் எழுப்ப மறுப்பது ஏன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பாரத் மாதா கி ஜெய் என முழங்கமாட்டோம் என்பது புதுவகையான தீவிரவாதமாக உருவெடுக்கிறது என கொந்தளித்தார்.

English summary
Darul Uloom Deoband has issued a fatwa stating Muslims should refrain from chanting the slogan ‘Bharat Mata ki Jai’ as it was against the basic tenets of their religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X