For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன 999 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனா?- டேட்டா வைண்டுடன் இணைந்து அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூபாய் 999க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆபர்களுடன் மட்டும் வெளிவருகிறது.

எல்லா வசதிகளும் உண்டு:

எல்லா வசதிகளும் உண்டு:

மற்ற சாதாரண ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

2ஜி மட்டுமே சப்போர்ட் ஆகும்:

2ஜி மட்டுமே சப்போர்ட் ஆகும்:

எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும். பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்கள் கைகோர்ப்பு:

முன்னணி நிறுவனங்கள் கைகோர்ப்பு:

இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

பிறந்தநாள் அன்று வெளிவருமா?:

பிறந்தநாள் அன்று வெளிவருமா?:

வரும் டிசம்பர் 28 ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.

English summary
bile phone and tablet maker DataWind is teaming up with Anil Ambani-owned Reliance Communications (RCom) to launch the world's most affordable smartphone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X