For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி... ஜலந்தரில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

ஜலந்தர்: தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி.

நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார். முதல் முயற்சியிலேயே நீதிபதி கனவுக்கு சுருதிக்கு நிஜமானது.

Daughter joins same court as a judge where her father sells tea

விரைவில் அவர் தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்திலேயே நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதிக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்துள்ளது.

சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, ‘சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக'வும் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளின் லட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் கூறுகையில், "இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை" என்கிறார்.

பெருமையான தருணமும் கூட...!

English summary
Surinder Kumar has worked as a tea seller all his life. As an owner of a tea shop right across the court, Surinder has been serving people tea at the complex of the sub-divisional magistrate in Nakodar (Jalandhar district), for years. But little did he know that one day his daughter would walk through the doors of the same court as a judge!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X