For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடராஜனை தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்

By BBC News தமிழ்
|

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்ட தங்கராசு நடராஜன் தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு ஒரு வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார்.

ஆனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணி பங்கேற்ற டி20, ஒரு நாள், டெஸ்ட் என எல்லா ரக போட்டிகளிலும் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு அமைந்தது. இப்படி ஒரு வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமானது மட்டுமின்றி தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியது நடராஜனின் திறமையை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், நடராஜன் குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், "வாழ்த்துகள் நட்டு" என தமிழிலேயே வாழ்த்துத் தெரிவித்து பேச்சை தொடங்கினார்.

அதன் பின் "நீங்கள் உண்மையாகவே ஒரு சிறந்த வீரர். நீங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு அருமையான மனிதர். எங்கள் அணியில் நீங்கள் இருப்பதை அனைவரும் விரும்புகிறோம். வாழ்த்துகள்" என்றார் வார்னர்.

நடராஜன் குறித்த மற்றொரு கேள்வியின் போது, "நான் நடராஜனின் அணித் தலைவராக இருப்பது என் அதிர்ஷ்டம். அவர் ஓர் அருமையான மனிதர். மிகவும் தன்மையானவர். அவர் அருமையான திறன் படைத்தவர். ஐபிஎல் 2020 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிவிட்டு, தன் மனைவியின் பிரசவத்துக்குக் கூட செல்லாமல், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் வலைப் பந்து வீச்சாளராகச் சென்று, அனைத்து ரக போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். எவ்வளவு பெரிய சாதனை இது" என பாராட்டியிருக்கிறார் வார்னர்.

David Warner wishes Natarajan for his debut tour victory against Australia
Getty Images
David Warner wishes Natarajan for his debut tour victory against Australia

அதே போல செய்தியாளர் கேட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது. "நடராஜனுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஐபிஎல் 2021-ல் நடராஜன் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். சூழ்நிலைக்கேற்ப எப்படி பந்து வீச வேண்டும் என்பதை அவர் அறிவார்" என புகழ்ந்து தள்ளிவிட்டார் டேவிட் வார்னர்.

இந்த ஆண்டும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கிறார் நடராஜன். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தார் நடராஜன். அதோடு கடினமான காலகட்டங்களில் கடைசி ஓவர்களில் கூட, நடராஜன் மிகச் சரியாக யார்க்கரை வீசியது, பலரின் கவனத்தை ஈர்த்தது.

"நேற்று நடராஜனுக்கு, அவரது ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நேரடியாகப் பார்த்தோம். அதைப் பார்க்க அத்தனை பெருமையாக இருந்தது" எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் வார்னர்.

இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
David Warner wishes Natarajan for his debut tour victory against Australia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X