For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டிஸ்கரில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நக்சல் வெறிச்செயல்

Google Oneindia Tamil News

ராய்பூர்: சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று 6 இடங்களில் குண்டு வெடித்து இருக்கிறது.

சட்டிஸ்கரில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் அங்கு 90 தொகுதிகள் உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு நாளையும், வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

 A day before the election: Encounter Underway in Chhattisgarh as Naxals made Multiple Blasts

நாளை தேர்தல் நடக்க உள்ள 12 தொகுதிகளும் நக்சல் தாக்குதல் நிறைந்த தொகுதிகள் ஆகும். இதனாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டள்ளது. இந்த நிலையில்தான் அங்கு ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.

சட்டிஸ்கரில் தாண்டேவாடா காட்டுப்பகுதி, பிஜப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எத்தனை உயிர் சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. ஐஇடி எனப்படும் தீவிரவாதைகள் பயன்படுத்தும் IED - Improvised explosive device குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து நக்சல் - பாதுகாப்பு படை இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

English summary
Chhattisgarh: One BSF ASI injured in an IED blast in Kanker's Koyali beda. A set of 6 IEDs were planted in a series and were set off in one go between village Gome and Gattakal in Koyali beda
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X