For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சி.ஏ.ஏ.வை ஆதரிக்கும் குடியேறிகள்... மேகாலயாவில் பூர்வகுடிகள் கொந்தளிப்பு- வன்முறைகளில் 2 பேர் பலி!

Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் பூர்வகுடி மக்களுக்கும் குடியேறிய பிற மாநிலத்தவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறைகளில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் உயிர்களை பலி கொண்டு வருகிறது. அஸ்ஸாமில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் பலர் பலியாகினர். இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் பலர் மாண்டனர்.

Death toll rise 2 in anti-CAA unrest in Meghalaya

டெல்லியின் வடகிழக்கில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா கும்பல் ஆடிய வெறியாட்டத்தில் 35 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது மேகாலயா மாநிலத்திலும் சி.ஏ.ஏ.வால் வன்முறை வெடித்துள்ளது.

மேகலாயா மாநிலத்துக்குள் பிற மாநிலத்தவர் உள்நுழைய இன்னர் லைன் பெர்மிட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேகாலயா பழங்குடி மக்களின் தேசிய இன அடையாளம் சிதைக்கப்படாது என கூறப்படுகிறது. ஆனால் மேகாலயாவின் பூர்வ குடிகளைப் பொறுத்தவரை சி.ஏ.ஏ.வை எதிர்க்கின்றனர்.

கொல்கத்தாவில் அமித்ஷா.. களைகட்டும் Go Back Amit Shah கோஷம்! வரிந்து கட்டிய எதிர்க்கட்சிகளால் டென்ஷன்கொல்கத்தாவில் அமித்ஷா.. களைகட்டும் Go Back Amit Shah கோஷம்! வரிந்து கட்டிய எதிர்க்கட்சிகளால் டென்ஷன்

அதே நேரத்தில் மேகாலயாவில் குடியேறிய பிற மாநிலத்தவர் சி.ஏ.ஏ.வை ஆதரிக்கின்றனர். இதனால் பூர்வகுடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்தனர்.

தனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைகளைத் தடுக்க மேகாலயாவில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேகாலயாவைப் பொறுத்தவரையில் பூர்வகுடிகளுக்கும் குடியேறிகளுக்குமான பிரச்சனை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. தற்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வன்முறையாக வெடித்திருக்கிறது.

English summary
Meghalaya state remained tense after 2 were left dead and ten others injured in clashes over the Citizenship Amendment Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X