For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயாவை பலாத்காரம் செய்கையில் அமைதியாக அனுமதித்திருக்க வேண்டும்: குற்றவாளி திமிர் பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதால் பலியான 23 வயது மாணவி தான் அந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றவாளிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் கைதான முகேஷ் சிங் என்பவர் சிறையில் இருந்தபடியே பிபிசியின் ஆவணப்படத்திற்காக பேசியுள்ளார். இது வரும் 8ம் தேதி ஒளிபரப்பாகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

பெண்

பெண்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பொறுப்பு. அந்த பெண்ணின் ஆண் நண்பர் மட்டும் எங்களை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் நாங்கள் அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்க மாட்டோம்.

விபத்து

விபத்து

அன்று பேருந்தில் நடந்தது ஒரு விபத்து. பலாத்காரம் செய்யும்போது அந்த பெண் எங்களை எதிர்த்து போராடியிருக்கக் கூடாது.

அமைதி

அமைதி

அமைதியாக இருந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அனைத்தும் முடிந்த பிறகு அவரின் நண்பரை மட்டும் அடித்திருந்திருப்போம்.

இரவு

இரவு

இரண்டு கையும் சேர்ந்து தட்டினால் தான் சப்தம் வரும். நல்ல பெண் இரவு 9 மணிக்கு ஊர் சுற்ற மாட்டார். ஆணும், பெண்ணும் சரி சமம் அல்ல. வீட்டு வேலையை செய்வது தான் பெண்களின் வேலை. இரவு நேரத்தில் பார், டிஸ்கோக்களுக்கு செல்வது, தவறானவற்றை செய்வது, தவறான ஆடைகளை அணிவது பெண்களுக்கு சரியல்ல. பெண்களில் 20 சதவீதம் பேர் நல்லவர்கள் என்றார் முகேஷ்.

மகளிர் தினம்

மகளிர் தினம்

முகேஷ் பேசிய வீடியோ மகளிர் தினத்தன்று பிபிசியில் ஒளிபரப்பாக உள்ள இந்தியாவின் மகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட உள்ளது.

English summary
Mukesh Singh, one of Nirbhaya's rapist told that she is responsible for what happened to her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X