For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்.. உமர் அப்துல்லா கருத்து

மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் அதிரடி ராஜினாமா- வீடியோ

    ஸ்ரீநகர்: மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்தது. பா.ஜ.க.ஆதரவை வாபஸ் பெற்றதால் காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2016-ம் ஆண்டில் பாஜக - மெஹபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 89 எம்எல்ஏ.க்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள், மெஹபூபாவின் பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.

    45 எம்எல்ஏக்கள் ஆதரவு

    45 எம்எல்ஏக்கள் ஆதரவு

    உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

    விரைவில் முடிவு

    விரைவில் முடிவு

    இந்நிலையில் மெஹபூபா ராஜினாமா குறித்து தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மகிழ்ச்சி

    காங்கிரஸ் மகிழ்ச்சி

    காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்ததற்கு காங்கிரஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் குற்றத்தை பா.ஜ.க. ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆட்சி அமைக்க மாட்டோம்

    ஆட்சி அமைக்க மாட்டோம்

    பிடிபி கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்றும், ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்றும் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

    English summary
    National Conference party Leader Umar Abdullah said the decision to support Mehbooba Mufti will be decided soon. Congress happy for break up between BJP and PDP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X