For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை..வீடியோ

    டெல்லி: மத்திய, மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட ராணுவ சேவையாற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    பாதுகாப்பு துறை இதற்கான கோரிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது. இந்திய ராணுவத்தில் தற்போது பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இந்த பற்றாக்குறையை போக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வடகொரியா போன்ற சில நாடுகளில் மட்டுமே இந்த சட்டம் இருக்கிறது.

    பற்றாக்குறை நிலவுகிறது

    பற்றாக்குறை நிலவுகிறது

    தற்போது இந்திய ராணுவத்தின் மூன்று படைகளிலும் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. ராணுத்துவத்தில் 7,679 பேர் குறைவாக இருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை கூறியுள்ளது. அதேபோல் கப்பல் படையில் 1,434 பேர் குறைவாக இருக்கிறார்கள். விமான படையில் 146 பேர் குறைவாக இருக்கிறார்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகமாகும்.

    எடுக்கலாம்

    எடுக்கலாம்

    இதனால் மத்திய அரசு பணிகளில் வேலை செய்ய இருக்கும் பணியாளர்களை ராணுவத்தில் எடுக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்து இருக்கிறது. இவர்கள் கட்டாயமாக ஐந்து வருடம் வேலை செய்தால் இந்த பற்றாக்குறை குறையும் என்று பாதுகாப்பு துறை கருத்து தெரிவித்து இருக்கிறது.

    எந்த பணியாளர்கள்

    எந்த பணியாளர்கள்

    மத்திய அரசு பணியாளர்கள் மட்டுமில்லாமல் மாநில அரசு பணியாளர்களும் இதில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். எந்த விதமான பணியாளர்கள் ராணுவத்திற்கு தேர்வாவார்கள் என்று கூறப்படவில்லை. மத்திய அரசில் இருந்து 70 சதவிகித பணியாளர்களும், மாநில அரசில் இருந்து 30 சதவிகித பணியாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கையெழுத்தாகவில்லை

    கையெழுத்தாகவில்லை

    தற்போது பாதுகாப்பு துறையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறது. ஆனால் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இன்னும் இதில் முடிவு செய்யவில்லை. பெரும்பாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Defence ministry plans for 5-yr compulsory military service for new govt officers. Defence ministry plans this scheme due to shotage in army officers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X