For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எளிய மக்கள் கட்சியின் எமகாதக செலவு... விளம்பரத்துக்காக ரூ. 22 கோடியை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: எளிய மக்கள் கட்சி என்று ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழில் மொழிபெயர்த்தனர் சிலர். ஆனால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசோ விளம்பரத்திற்காக செலவிட்டுள்ள தொகையை வைத்து பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

3 மாதத்தில் விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 22 கோடியை செலவிட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு. நாளிதழ்கள், சஞ்சிகைகள், டிவி என அனைத்திலும் விளம்பரம் செய்து அசத்தி விட்டார் கெஜ்ரிவால். 3 மாத காலம் கொடுக்கப்பட்ட இந்த விளம்பரங்களுக்கான செலவு ரூ. 22 கோடியாம்.

Delhi AAP govt spent Rs 22 Cr in 3 Months for Advts

கெஜ்ரிவால் அரசின் இந்த விளம்பர மோகத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் அஜய் மேக்கான் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த மே மாதம்தான் சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களைத் தவிர வேறு யாரின் படங்களும் அரசு விளம்பரத்தில் இடம் பெறக் கூடாது என்று கூறியிருந்தது.

இதனால் கெஜ்ரிவால் அரசு தனது விளம்பரங்களில் கெஜ்ரிவாலின் படங்களைப் போடவில்லை. மாறாக அவரது குரல் உள்ளிட்டவற்றை டிவி விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், கெஜ்ரிவால் அரசு விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை குறித்த விவரத்தை சமர்ப்பிக்க கோரியிருந்தது. இதையடுத்து இந்த கணக்கு விவரத்தை ஆம் ஆத்மி அரசு நேற்று சமர்ப்பித்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பொதுமக்கள் பணம் பெருமளவில் முறைகேடாக செலவிடப்பட்டதற்கு முகாந்திரம் இருக்கிறது என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Delhi AAP government, has said that it spent 22 crores on 30 days of print and electronic promotions spread over a period of three months, in Delhi HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X