For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுங்க... பொதுமக்களுக்கு கெஜ்ரிவால் ‘திடுக்’ அட்வைஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் அவர்களை அடையாளம் கண்டு சிறையில் அடைக்க முடியும் எனவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இணைந்து போராடியவர் கெஜ்ரிவால். பின்னர் ஆம் ஆத்மி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, தற்போது டெல்லி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

Kejriwal

இந்நிலையில், ஊழல் அதிகாரிகளுக்கு மேலும் லஞ்சம் கொடுத்து, அவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் மாட்டி விடும் படி அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

ஊழல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களை அடையாளம் கண்டு அவர்களை 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். லஞ்சம் கொடுப்பவர்கள் முன்னரே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்து விட்டால் அவர்கள் தப்பிக்கலாம். இல்லாவிடில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்க வேண்டி இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Delhi chief minister Arvind Kejriwal will have to review his advice to people to pay bribes to corrupt officials and send him the recording.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X