For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘பெண் கருவை கலைக்க மாட்டோம்’... 4 டெல்லி புதுமண தம்பதிகள் உறுதிமொழி!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை அறிவிப்பினையடுத்து இதுவரை நான்கு புதுமணத் தம்பதிகள் பெண் கருவைக் கலைக்க மாட்டோம் என உறுதி எடுத்துள்ளனர்.

கடந்த 9ம் தேதி டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை, ‘‘பெண் கருவை கலைக்க மாட்டோம், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல பாதுகாத்து வளர்ப்போம் என்று புதுமணத் தம்பதிகள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி, இதுவரை 4 புதுமணத் தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளனதாக தெரிய வந்துள்ளது. வருவாய்த் துறை அதிகாரி முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்துகொண்ட போது இத்தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி சோம் நாயுடு கூறுகையில், ‘பெண் கருக்கலைப்பை தடுப்பதற்காகவும், வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் அறிவது சட்டவிரோதமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் எங்கள் நோக்கம்' எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் தனது சுதந்திர தின உரையில் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
In a significant initiative, the Delhi government is asking all newly-weds to take an oath that they will not indulge in female foeticide and will take care of the girl child just like they would a boy. The initiative by the Revenue Department which kick-started on August 9 has so far had four newlyweds taking the pledge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X