For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை இவரிடம் கொடுக்கலாமா?.. நட்டா மீது நம்பிக்கை இழந்த அமித் ஷா.. பாஜகவில் இனி என்ன நடக்கும்?

இன்று வெளியாகும் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஜே பி நட்டாவிற்கு ஒரு அமில சோதனையாக இருக்க போகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi election results - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அடைந்து இருக்கும் மோசமான தோல்வி பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஜெ பி நட்டாவிற்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அவர் தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்துள்ளார்.

    பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருந்த ஜே.பி நட்டா கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நட்டா போட்டியின்றி தலைவராக தேர்வானார். இவர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

    தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நட்டா எதிர்கொண்ட முதல் தேர்தல்தான் டெல்லி சட்டசபை தேர்தல் ஆகும். அவரின் செயல்பாடு எப்படி, தலைவராக அவர் எப்படி நடந்து கொண்டார், கட்சியை கட்டுப்படுத்தினார் என்று இன்று தெரிந்துவிடும்.

    யார் இவர்

    யார் இவர்

    கிட்டத்தட்ட அமித் ஷா தனது தலைவர் பதவியை நட்டாவிற்கு பரிசாக அளித்தார் என்றுதான் கூற வேண்டும். நட்டா பல வருடமாக அமித் ஷாவின் டீமில் தேர்தல் பணிகளை செய்து இருக்கிறார். அப்போதில் இருந்தே அமித் ஷாவின் சொல்படி நடந்து பழகியவர்தான் நட்டா. நட்டாவும் அமித் ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார் என்கிறார்கள். நட்டா அமித் ஷாவிற்கு மிகவும் விசுவாசமான நபர். நட்டாவிற்கு இந்த பதவியை கொடுத்ததே அமித் ஷாவின் கணக்குதான்.

    ஒரே ஸ்டைல்

    ஒரே ஸ்டைல்

    நட்டா அமித் ஷா இருவரும் ஒரே பாணி அரசியல் ஸ்டைல் கொண்டவர்கள். கடந்த டெல்லி பிரச்சாரத்திலேயே அரசியல் கட்சிகள் இதை தெரிந்து கொண்டது. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க பாஜக கட்சி அடித்து ஆடியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பாஜகவின் 7 எம்பிக்கள், ஆம் ஆத்மிக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தனர். அனுமான் பிரச்சாரம் தொடங்கி சிஏஏ எதிர்ப்பு போராட்டம் வரை அனைத்தையும் நட்டா மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    பொதுவாக பாஜக தலைவர்களை சர்ச்சையாக பேச வைத்து அதன் மூலம் வாக்குகளை வாங்க வைப்பதுதான் அமித் ஷா ஸ்டைல். இதைத்தான் தற்போது நட்டாவும் செய்து வருகிறார். ஆனால் இது குஜராத்திலும், உத்தர பிரதேசத்திலும் உதவியது, மாறாக டெல்லியில் உதவவில்லை. டெல்லியில் பிரச்சாரம் செய்த்த மனோஜ் திவாரி தொடங்கி உபி முதல்வர் ஆதித்யநாத் வரை சர்ச்சையாக பேசினார்கள்.

    என்ன ஐடியா

    என்ன ஐடியா

    துப்பாக்கியால் சிஏஏ போராட்டக்காரர்களை சுட வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இதெல்லாம் பாஜகவிற்கு மோசமான விளம்பரம் தேடிக்கொடுத்தது. இதெல்லாம் நட்டா கொடுத்த ஐடியாதான் என்கிறார்கள். இதுவும் கூட பாஜக ஒருவகையில் தோல்வி அடைய காரணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போது ஜே பி நட்டாவிற்கு சிக்கலாக மாறி உள்ளது. நட்டாவின் அரசியல் ஸ்டைல் பலன் அளிக்கவில்லை என்று இப்போதே டெல்லி பாஜகவில் புலம்பல் கேட்க தொடங்கிவிட்டது.

    இன்று தெரியும்

    இன்று தெரியும்

    அவர் தலைவராக கட்சியை கட்டுக்குள் கொண்டு வரவில்லை. மாநில தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கி வந்த பாஜகவை நட்டாவால் மீட்க முடியவில்லை என்று புலம்பல்கள் கேட்க தொடங்கி உளது. இன்று வெளியானடெல்லி தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக பாஜகவின் புதிய தேசிய தலைவர் நட்டாவிற்கு ஒரு மிகப்பெரிய தோல்வியாக, பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய பாஜகவில் நிறைய அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.அமித் ஷா நட்டா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    தமிழக தேர்தல்

    தமிழக தேர்தல்

    2021ல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுகிறது. இரண்டு மாநிலங்களையும் பாஜக மிக முக்கியமானதாக பார்க்கிறது. அந்த தேர்தலையும் நட்டாதான் நம்பி களமிறங்கலாமா என்று பாஜக நினைக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் பெரிய மேஜிக் எதையும் நிகழ்த்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நினைத்ததை விட குறைவான இடங்களையே பாஜக வென்றுள்ளது. அதனால் தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலில் அவரை நம்பி பாஜக களமிறங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Delhi election results will be a litmus test for BJP new Chief in Command J P Nadda .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X