For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி சட்டசபைத் தேர்தல்: 70 தொகுதிகளில் 67% சதவீதம் வாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பாஜக, ஆம் ஆத்மிக்கு இடையே பலத்த போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் கடும்குளிர் நிலவுவதால், காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, பின்னர் விறுவிறுப்படைந்தது. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி, 67 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

Delhi Elections 2015: Record 67.08% voting

வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த பாதுகாபுடன் கொண்டு செல்லப்பட்டன. வரும் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதனிடையே, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

English summary
A record 67.08 per cent turnout was registered today in the fiercely fought Delhi assembly polls where BJP and AAP are locked in a blockbuster fight, outcome of which may have ramifications on the national political scenario.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X