For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்காக ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலங்கள்- நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாசார திருவிழாவுக்காக யமுனை நதிக்கரையில் செழிப்பான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக புகார்கள் குவிந்துள்ளன.

டெல்லி யமுனை நதிக்கரையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார திருவிழா நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்தும் 35,000 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Delhi farmers protes against Sri Sri Ravi Shankar

இந்நிகழ்ச்சிக்கான ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு எதிரான மனுக்களை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததில் விதிமீறல்கள் இருக்கின்றன. சுற்றுச் சூழலை சிதைத்ததற்காக வாழும் கலை அமைப்பு ரூ5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்நிகழ்ச்சிக்காக மத்திய அரசு ரூ2.25 கோடி நிதி உதவி அளித்திருப்பதும் புதிய பஞ்சாயத்தாக உருவெடுத்திருக்கிறது. கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாதான் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் இந்த நிகழ்ச்சிக்காக செழிப்பான விளைநிலங்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் தற்போது புகார்கள் வெடித்துள்ளன. அங்கிருந்து விவசாயிகள் 'அகதிகளாக' விரட்டியடிக்கப்பட்ட கொடுமையும் அரங்கேறி இருக்கிறது.

இதைவிட உச்சகட்டமாக இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியதற்காக 3 பேர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்திருக்கிறது. கிழக்கு டெல்லியின் நொய்டா சாலையில் ரவிசங்கரின் நிகழ்ச்சியை ஒட்டி பூங்கா ஒன்றை அமைக்கப் போவதாக கூறியே இந்த ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையின்ரோ தலித்துகளும் சிறுபான்மை சமூகத்தினரும்தான். இது குறித்து விரட்டியடிக்கப்பட்ட விவசாயி முகமது இப்ராம் கூறியதாவது:

என்னுடைய சகோதரர் சல்மான் டெல்லி பல்கலைக் கழக மாணவர். எங்களை போலீசார் உதவியுடன் வெளியேற்றுவதைக் கண்டித்து சல்மான், அவருடைய நண்பர் யாமீன், ஷிவ்குமார் ஆகியோர் போராடினர். தற்போது இந்த 3 பேரையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டது முதல் வழக்கறிஞருக்கு ரூ10,000 கட்டணம் வரை கொடுத்திருக்கிறோம் என்றார்.

ஆனால் சல்மான் மற்றும் அவரது நண்பர்கள் மீது ரூ300ஐ வழிப்பறி செய்ததாக வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்கிறார் அவர்களது வழக்கறிஞர் ரெஹ்மான். இப்படி இப்ராமின் ஒரு குடும்பம் மட்டும் பாதிக்கப்படவில்லை.. அப்பகுதியில் உள்ள சில்லா என்ற கிராமமே இந்த நிகழ்ச்சிக்காக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கூறுகையில், கடந்த மாதம் 20-ந் தேதி காசியாபாத்துக்கு திருமணம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. அப்போது 4 புல்டோசர் இயந்திரங்கள் மூலம் எங்களுடைய விளைநிலத்தை யாரோ அழித்துக் கொண்டிருந்தார்கள்... அதை தடுக்க கடுமையாக போராடினேன்... ஆனால் போலீசார் உதவியுடன் அவர்கள் அதை அழித்து ஆக்கிரமித்து கொண்டார்கள் என கண்ணீர் சிந்துகிறார்.

அதுவும் இந்த நிலங்கள் அனைத்தும் உத்தரப்பிரதேச மாநில அரசின் கீழ் வருகிறது.... ஆனால் டெல்லி போலீசார்தான் அத்துமீறி தலையிட்டு ஆக்கிரமித்து கொடுத்திருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்படி நூற்றுக்கணக்கான விவசாயிகள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதியன்று அப்பகுதிக்கு சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விளைநிலத்தையெல்லாம் அழித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது. அனைவருக்கும் நிச்சயம் நட்ட ஈடு தருவோம்.. உங்களுக்கு அநீதி நடக்கவிடமாட்டேன் என தத்துவம் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதுவும் நில ஆக்கிரமிப்புதான்!

English summary
The Farmers of banks of the Yamuna lost their land for Sri Sri Ravi Shankar's “Making Life a Celebration programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X