For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டில் முதல் முறை.. முக்கிய வழக்குகளில் சாட்சி சொல்வோரை பாதுகாக்க டெல்லி அரசு அதிரடி திட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக, குற்றச்செயல்களுக்கு சாட்சியம் அளிப்போருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வருகிறது.

கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியம் சொல்வோர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது காலம் காலமாக தொடரும் கதையாக உள்ளது. உயிருக்கு பயந்தே, நேரில் கொலை நடந்ததை பார்த்தாலும், சாட்சி சொல்லாமல், எனக்கு தெரியாது என்று சொல்வோர் அதிகரித்துவிட்டனர். இது குற்றவாளிகளுக்கு வசதியாகிவிட்டது.

Delhi govt starts witness protection programme

இந்த நிலையை மாற்ற, டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 'சாட்சியங்கள் பாதுகாப்பு' ன்ற பெயரில் திட்டம் கொண்டு வருகிறது. இதன்படி, சாட்சியங்கள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப மூவகையாக பிரிக்கப்படுவார்கள். மிரட்டல்கள், அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப சாட்சியங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் தன்மைகள் மாறுபடும்.

சாட்சியங்களின் வீட்டுக்கு வெளியே போலீசார் அவ்வப்போது ரோந்து செல்வது, சாட்சிகளின் வீட்டை மாற்றுவது, டெலிபோன் நம்பர்களை மாற்றுவது, சாட்சிகளின் வீடுகளுக்கு வெளியே ரகசிய கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

English summary
The Delhi government on Thursday decided to formulate a comprehensive policy for protecting witnesses, an official said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X