For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் கிடைக்குமா, இல்லையா.. தீர்ப்பை ஒத்தி வைத்தது டெல்லி ஹைகோர்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீனை இல்லையா?

    டெல்லி: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரம், கடந்த மாதம் 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Delhi HC reserves order on Karti Chidambarams bail plea

    இதனிடையே, தன்னை ஜாமீனில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நடந்தது. கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சிபிஐ தனது குற்றச்சாட்டை நிரூபிக்காமல் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்க கூடாது என்றார்.

    சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தஷ்கர் மேஹ்தா ஆஜராகி ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Delhi High Court today reserved its order on the bail plea of Karti Chidambaram, son of senior Congress leader P Chidamabaram, in the INX Media corruption case lodged by the CBI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X