For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை நோக்கியா விவகாரம்.. அவசர வழக்காக விசாரணை நடத்த ஹைகோர்ட் ஒப்புதல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை நோக்கியா ஆலை மற்றும் வருமான வரித் துறை நடுவேயான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க டெல்லி ஹைகோர்ட் சம்மதித்துள்ளது. எனவே அடுத்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் செயல்பட்ட நோக்கியா ஆலை, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வரி செலுத்தவில்லை எனக் கூறி, அதன் செயல்பாடுகளை வருமான வரித்துறை முடக்கியது.

Delhi High Court agrees to urgent hearing of Nokia pllea

இந்த வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி, வருவதாக இருந்தது. இதனிடையே, நோக்கியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஹைகோர்ட்டை அணுகி, நிறுவனத்தை வாங்க பார்ட்டி கிடைத்துள்ளதாகவும், எனவே, உடனடியாக, வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கபில் சிபலின் கோரிக்கையை பரிசீலித்த பாதர் டுரீஜ் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இம்மாதம் 26ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

எனவே, சுமார் 4 மாதங்களுக்கு முன்பாகவே, இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

English summary
The tax dispute between Nokia India and Income Tax department, which has raised a claim of Rs. 10,000 crore on the telecom firm, would be taken up by the Delhi High Court for an urgent hearing next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X