For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

62 வயது முதியவரை 9 நாட்கள் கட்டிவைத்து கொடுமை செய்த மனைவி, மகன்.. அதிரவைக்கும் பின்னணி

டெல்லியில் 62 வயது முதியவரை 9 நாட்கள் கட்டிவைத்து அவரது குடும்பம் கொடுமை செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 62 வயது முதியவரை 9 நாட்கள் கட்டிவைத்து அவரது குடும்பம் கொடுமை செய்து இருக்கிறது. கொடுமை படுத்தப்பட்ட ராஜேஷ் பன்சால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

முதியவரின் மனைவி நீலம் பன்சால் மற்றும் மகன் நிமித் பன்சால் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சங்கிலி

சங்கிலி

அவரின் கை, கால் இரண்டிலும் சங்கிலியால் கட்டி இருக்கிறார்கள். 9 நாட்களாக ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை. மேலும் இடை இடையே இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள்.

எப்படி

எப்படி

அவர் தன்னிடம் கிடைத்த பேப்பர் ஒன்றில் உதவி உதவி என்று கூறி ஜன்னலுக்கு வெளியே வீசி உள்ளார். அதை அந்த அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் பார்த்துவிட்டு, அங்கு இருந்த மற்றொரு வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் சந்தேகப்பட்டு போலீசில் இந்த வீடு குறித்து புகார் அளித்து இருக்கிறார்கள்.

குடி பழக்கம்

குடி பழக்கம்

போலீஸ் அங்கு வந்து அந்த முதியவரை மீட்டனர். அவரின் குடிப்பழக்கத்தை சரிசெய்யவே இப்படி செய்ததாக கூறியுள்ளனர். தற்போது அந்த முதியவர் மீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

உண்மை

உண்மை

ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவரின் பெயரில் இருக்கும் சொத்துக்களை வாங்கவே இந்த நாடகம் நடந்துள்ளது. சொத்து பாத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி அவர் மோசமாக அடித்து துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்.

English summary
Delhi 62 year old man named Rajesh Bansa locked for 9 days in his home, son Nimit Bansal and wife Neelam Bansal arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X