For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ஜிலேபி’ தேனே இத்னா லேட்.. ஊழியரை துப்பாக்கியால் சுட்ட செக்யூரிட்டி!

Google Oneindia Tamil News

Delhi: Man shot in the head over 'jalebis'
டெல்லி: ஒரு பிளேட் ஜிலேபி தர தாமதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த செக்யூடிரிட்டி ஒருவர், தனது துப்பாக்கியால் அங்கிருந்த ஊழியரைச் சுட்ட சம்பவத்தால் டெல்லி கோலே மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று டெல்லி கோலே மார்க்கெட் பகுதியில் உள்ள இனிப்பகத்திற்கு நிரேஜ் குமார் என்ற செக்யூரிட்டி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம் ஒரு பிளேட் ஜிலேபி தருமாறு கேட்டுள்ளார் நிரேஜ். ஆனால், கூட்டம் காரணமாக ஜிலேபி வர தாமதமாகியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த நிரேஜ், கடையில் வேலை பார்க்கும் சதேந்தர் சிங்குடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாற, கடும் கோபம் அடைந்த நிரேஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சதேந்தர் சிங்கை சுட்டுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த சதேந்தர் சிங் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சதேந்தர் சிங்கின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நிரேஜைப் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
A security guard allegedly shot a man in the head on Tuesday in rage at having to wait for a plate of jalebis. The incident took place at a sweet shop in the Gole Market area of central Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X