For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்று மாசுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த கோஹ்லி!

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சுவாசிக்கவே முடியாத நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பால் காற்று மாசுபடுவது ஒரு காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தனியார் போக்குவரத்தை விடுத்து மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், டெல்லியின் நிலை என்ன என்பது நமக்கு நிச்சயம் தெரியும். நிறையப்பேர் இது ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விவாதித்து மட்டும் வருகிறார்கள். மாசுபாட்டிற்கு எதிரான இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து விளையாடினால் மட்டுமே இது முடியும்.

டெல்லியில் நிலவி வரும் மாசுபாட்டைக் குறைப்பது நமது கடமை. மக்கள் இந்த நேரத்தில் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த வேண்டும். பேருந்து, மெட்ரோ, ஓலா ஷேர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது இதை மக்கள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். நமது ஒரு சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்திற்கு வ்ழிவகுக்கும் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Delhi People we need act Now against Air Pollution says Cricket player Virat Kohli. Delhi is suffering from mass air pollution for the past week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X