For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறைக்குள் நுழைந்து பீட்டா கும்பல் அட்டூழியம்-தமிழக முதல்வருக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது டெல்லியில்?

தமிழக முதல்வரின் அறைக்குள் நுழைந்து பீட்டா கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு டெல்லியில் பாதுகாப்பு பலமாக இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகள் துன்புறுத்துவதால் அதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பினர் வழக்கு பதிவு செய்தனர். எனினும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கோரி மாபெரும் புரட்சி வெடித்தது.

லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தையும் பிறப்பித்தார்.

முதல்வர் டெல்லி பயணம்

முதல்வர் டெல்லி பயணம்

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கு பீட்டா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றார்.

பீட்டா கும்பல் அட்டூழியம்

பீட்டா கும்பல் அட்டூழியம்

பிரதமரை காலையில் சந்தித்து கோரிக்கைகளை மனுக்களை அளித்துவிட்டு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அப்போது, அவர் தங்கியுள்ள அறையில் நேராக நுழைந்த பீட்டர் கும்பல் முதல்வரை எதிர்த்து கோஷங்களை போட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

ஒரு மாநிலத்தில் முதல்வர் டெல்லி சென்று தங்கி இருக்கிறார் என்றால் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய போலீசார், ஒரு கும்பல் வந்து முதல்வரின் அறைக்குள் நுழையும் வரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தது என்பதுதான் கேள்வி.

மத்திய அரசுதான் காரணம்

மத்திய அரசுதான் காரணம்

முதல்வரின் அறைக்குள் நுழைந்த பீட்டா கும்பல் முதல்வரை தாக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இதுபற்றி எல்லாம் கொஞ்சமும் யோசிக்காத டெல்லி போலீசார் முதல்வருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவது போன்று முதல்வருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பையும் முறையாக கொடுக்காமல் இருக்கிறதோ என்னவோ மத்திய அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Delhi police have not given proper protection to Tamil Nadu CM Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X