For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1984 சீக்கியர் படுகொலை- காவல்துறையை முடக்கி வைத்த காங்கிரஸ் அரசு: "கோப்ராபோஸ்ட்" திடுக் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 1984 ம் ஆண்டு சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட போது காவல்துறையை அப்போதைய காங்கிரஸ் அரசு முடக்கி வைத்ததாக 'கோப்ராபோஸ்ட்' இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கு பின்னர் வெடித்த கலவரத்தின்போது காவல்துறையினரிடம் அரசு விதித்த கட்டளைகள் தொடர்பான ஆதாரங்களைக் கொண்டு கோப்ராபோஸ்ட் புலனாய்வுச் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கலவரம் வெடித்தச் சூழலில், கலவரத்தை தடுக்க முதற்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி கவுதம் கவுலிடம் எஸ்.சி டான்டன் பேசிய உரையாடல் பதிவு இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் அரசு

கலவரத்தைக் கடுப்படுத்த வேண்டாம் என்று காவல்துறையிடம் அப்போதைய அரசு அறிவுறுத்தியது.

சீக்கியர்கள் மீதான தாக்குதல்

கலவரத்தில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க வேண்டும் என்று கூறியவர்களுடைய குரல் முற்றிலும் ஒடுக்கப்பட்டது.

கலவரக்காரர்களுக்கு ஆதரவு

மேலும், 'இந்திரா காந்தி ஜிந்தாபாத்' என்ற கோஷத்துடன் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தகவல் வந்ததாகவும், காவல்துறையினர் இதனையே பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்க எச்சரிக்கை

அத்துடன், இந்தக் கட்டளைகளை மீறினால் தாங்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிடுவோம் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால், கலவரத்தைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை.

சீக்கியர்களுக்கு பாடம்

காவல்துறையினர் அனைவரும் சீக்கியர்களுக்கு தக்கப் பாடம் கற்றுத் தர வேண்டும் என்ற அப்போதைய காங்கிரஸ் அரசின் அறிவுறுத்தலுக்கு பணிந்து நடந்துகொண்டது உரையாடலின் மூலம் புலப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் பேட்டி

சீக்கியக் கலவரத்தின்போது பணியில் இருந்த காவல்துறையினரிடம் நடத்திய நேர்காணலை அடிப்படையாக வைத்து இந்தப் புலனாய்வுச் செய்தியை கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ளது.

English summary
Delhi Police officials were complicit in the anti-Sikh riots that hit the city following after the assassination of the prime minister Indira Gandhi on October 31, 1984, says a new sting by Cobrapost, an investigative news website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X