For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரம்.. கூகுளின் உதவியை நாடிய டெல்லி போலீஸ்

சிபிஎஸ்இ பாடத்திட்ட வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கூகுளுக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ!- வீடியோ

    டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்ட வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கூகுளுக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. எந்த இமெயில் முகவரியில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டது என தெரிவிக்க கோரி டெல்லி போலீசார் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் சிபிஎஸ்இ கேள்வித்தாள் பரவியது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வெளியானது.

    கூகுளுக்கு கடிதம்

    கூகுளுக்கு கடிதம்

    இதையடுத்து அந்தப் பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இமெயில் முகவரி

    இமெயில் முகவரி

    சிபிஎஸ்இ தலைவருக்கு இ- மெயிலில் வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டது தொடர்பாக டெல்லி போலீசார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூகுளுக்கு கோரிக்கை

    கூகுளுக்கு கோரிக்கை

    எந்த இ.மெயில் முகவரியிலிருந்து வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டது என்பதை தெரிவிக்குமாறு டெல்லி போலீசார் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    144 தடை ஆணை

    144 தடை ஆணை

    இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தை தடுக்க

    போராட்டத்தை தடுக்க

    சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை பகுதியில் போராட்டம் நடப்பதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Delhi Police writes letter to Google on the issue of CBSE question papers leak. Delhi Police seeks information from Google about the Email address which sent the Question paper.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X