For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”எதிர்காலத்தில் இங்க செமத்தியா வாழலாமாம்”- 50 நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 44வது இடம்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள எதிர்காலத்தில் வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி 44வது இடத்தினைப் பிடித்துள்ளது.

எதிர்காலத்தில் பொருளாதார அளவில் வாழ்வதற்கான சிறந்த 50 நகரங்களின் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான டெல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக அதி நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக அளவிலான பொருளாதார வாழ்க்கை தரம், சிறந்த அறிவாளிகளுக்கான இடம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்றின் அடிப்படையில்:

மூன்றின் அடிப்படையில்:

மனித வளம், உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்றின் அடிப்படையில் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு 44 ஆவது இடம் கிடைத்துள்ளது.

முதலிடத்தில் சான் ஜோஸ்:

முதலிடத்தில் சான் ஜோஸ்:

முதலிடத்தில் சான் ஜோஸ் நகரம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து சான் பிரான்சிஸ்கோ 2 ஆம் இடத்திலும், சிங்கப்பூர் 3 ஆம் இடத்திலும், லண்டன் 4 வது இடத்திலும் உள்ளது.

மற்ற இடங்களில்:

மற்ற இடங்களில்:

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னி 10 வது இடத்திலும், சீனா தலைநகர் பெய்ஜிங் 24 ஆவது இடத்திலும், ஹாங்காங் 25 ஆவது இடத்திலும் உள்ளது.

பிரான்ஸுக்கு 26வது இடம்:

பிரான்ஸுக்கு 26வது இடம்:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 26 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ(32), ரஷ்யா தலைநகர் மாஸ்கோ(33) இடங்களை பிடித்துள்ளது.

மகிழ்ச்சியில் இந்திய டெல்:

மகிழ்ச்சியில் இந்திய டெல்:

எதிர்காலத்தில் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கும் இடம் கிடைத்துள்ளது பெருமையாக உள்ளதாக டெல் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ரவீந்தர் பி.சிங் கூறியுள்ளார். இதனை டெல்லி அரசும், மத்திய அரசும் நிஜமாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
The national capital has been recognised as one of the 50 future-ready cities around the world that are embracing technology to adapt and thrive in an ever-changing and globalised future, according to a report by IT major Dell.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X