For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ரிட்டர்ன்: ஆந்திரா- 21, அஸ்ஸாமில் 16 பேருக்கு கொரோனா; மணிப்பூர், அருணாச்சலில் பாதிப்பு

Google Oneindia Tamil News

அமராவதி/ குவஹாத்தி: டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களில் ஆந்திராவில் 21 பேருக்கும் அஸ்ஸாமில் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்திலும் முதலாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்

    டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத்தின் மத மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்று மாநிலங்களுக்கு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    Delhi Tablighi Jamaat event- 16 tests positive in Assam

    இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இதேபோல் அஸ்ஸாம் மாநிலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    தளபதி அறிவாலயத்தை எடுத்துக்கோங்க.. கொரோனா பயன்பாட்டிற்கு தூக்கிக் கொடுத்த திருப்பத்தூர் திமுக! தளபதி அறிவாலயத்தை எடுத்துக்கோங்க.. கொரோனா பயன்பாட்டிற்கு தூக்கிக் கொடுத்த திருப்பத்தூர் திமுக!

    மேலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் முதலாவது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த நபரும் டெல்லி மத மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர். மணிப்பூரில் ஏற்கனவே இளம்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் டெல்லி மத மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நபருக்கும் மணிப்பூரில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    English summary
    16 people have tested positive for the coronavirus in Assam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X