For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவச் செலவு: ஒரு கோடி ரூபாய்க்கு பில் கொடுத்த 35 வயது காங்கிரஸ் எம்.எல்.ஏ...

Google Oneindia Tamil News

டெல்லி: அனைவரும் அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே தங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். அதன் மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தற்பொது அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், 35 வயது காங்கிரஸ் எம்.பி ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மருத்துவ பில் அளித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி...

கடந்த 2008ம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசமான டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சட்டசபையில் சுமார் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

சமூக ஆர்வலர்....

எம்.எல்.ஏக்களின் மருத்துவச் செலவிற்காக அதிக செலவை அரசு மேற்கொள்வதாக கிளம்பிய தகவலின் அடிப்படையில், அது குறித்து சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 43 எம்.எல்.ஏக்களின் மருத்துவச் செலவு கணக்கைப் பெற்றார்.

முதலிடத்தில்...

அதன்படி, அதிகபட்சமாக ரோட்டாஸ் நகர் தொகுதியில் இருந்த தேர்வு செய்யப்பட்ட விபின் ஷர்மா (35) என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., கடந்த 2008ம் ஆண்டு முதல் ரூ1.03 கோடியை அரசிடமிருந்து மருத்துவ செலவிற்காக பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்....

இவருக்கு அடுத்தப்படியாக, சுயேட்சை எம்.எல்.ஏ.வான பரத்சிங் என்பவர் 25 லட்ச ரூபாயும், மூன்றாவதாக, சமீபத்தில் பாரதிய ஜனதாவிலிருந்து காங்கிரசில் சேர்ந்த எம்.எல்.ஏ. எச்.எஸ். பல்லியா 17 லட்ச ரூபாயும் பெற்றுள்ளதாக அத்தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

குறைந்தத் தொகை....

அதேபோல், மிகக் குறைந்த தொகையாக ரூ 8,182க்கு மருத்துவச் செலவு பில் அளித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ ஓ.பி.பாபர் என்பவர்.

English summary
Delhi Congress legislator Vipin Sharma, 35, has claimed Rs. 1.03 crore as medical reimbursement allocated to lawmakers in the capital, a reply to a Right to Information (RTI) query revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X