For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் பாதுகாப்பில் படு மோசம்.. காங்கோ தலைநகருக்கு அடுத்த இடம் பிடித்த டெல்லி! ஷாக்கிங் லிஸ்ட்

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்களின் பட்டியலில் இந்தியத் தலைநகர் டெல்லியும் மோசமான இடத்தை பெற்றுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் உள்ள நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்கள் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலகின் முக்கிய நகரங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டன.

இதனடிப்படையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியும் ஆய்வு செய்யப்பட்டது. டெல்லியில் தனியார் நிறுவனத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியத் தலைநகர் டெல்லியும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இந்தியத் தலைநகர் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறது.

 தலையார் நிறுவனம் நடத்திய ஆய்வு

தலையார் நிறுவனம் நடத்திய ஆய்வு

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. ஜநா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.

 எதை வைத்து ஆய்வு செய்யப்படும்

எதை வைத்து ஆய்வு செய்யப்படும்

இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது, அவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் எந்த வகையில் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை எல்லாம் ஆராயும். மேலும் அந்தப் பகுதியில் பெண்கள் இதற்கு முன் எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதையும் இது கருத்தில் கொள்ளும்.

 இந்தியத் தலை நகரிலும் ஆய்வு

இந்தியத் தலை நகரிலும் ஆய்வு

இதனடிப்படையில் இந்த நிறுவனம் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்தது. ஐநா சபையின் முதல் 19 பெரு நகரங்களின் பட்டியலில் டெல்லியும் இருப்பதால் இந்த நிறுவனம் டெல்லியையும் ஆய்வு செய்தது. டெல்லியில் தங்கி அங்கு நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், பெண்களின் நிலையையும் இது ஆய்வு செய்தது. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

 டெல்லியின் இடம்

டெல்லியின் இடம்

இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கின்றது. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெரோவும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியும், மூன்றாம் இடத்தில் காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷாவும் இருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் டெல்லியும் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டோக்கியோ உலகிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Delhi remains among the worst cities in the world for women. It takes 4th in the list in sexual attacks against women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X