For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை விதிக்க காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.பி. எம்.பி. விப்லாவா தாகூர் ராஜ்யசபாவில் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்றைய பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. விப்லவ் தாகூர், இந்தியாவில் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Demand to ban advts on fairness creams in RS

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் "சிவப்பழகு கிரீம் விளம்பரங்கள் சமூகத்தில் இன வேற்றுமையையும், இன ஒதுக்கலையும் உருவாக்குகின்றன. இந்த விளம்பரங்கள் பெண்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிறது. இதைத்தான் நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளதா?

சிவப்பழகு காரணமாக பல பெண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. இதனால் பெண்கள் கடும் வலியை அனுபவிக்கிறார்கள். இந்த பிரச்சனையில் மத்திய அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

English summary
A demand for banning the advertisements of fairness creams was made in the Rajya Sabha today, with members saying such products and their publicity were demeaning for women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X