For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடப் பாவத்த... பெங்களூரு திருடர்களுக்கு ஒரு வாரமா வேலையே இல்லையாம்.. ஏன் தெரியுமா?

ரூபாய் நோட்டு ஒழிப்புக்குப் பின்னர் சென்னையில் திருட்டு, வழப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடியோடு குறைந்து விட்டதாம்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு திருடர்கள் கடந்த பத்து நாட்களாக தொழில் நமுத்துப் போய் ரொம்பவே டல்லாகிப் போய் விட்டனாரம். எல்லாம் இந்த மோடி செய்த செல்லாத நோட்டு திருவிளையாடல்தான் காரணமாம்.

அதாவது பெங்களூரில் கடந்த 10 நாட்களாக வழிப்பரி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்து விட்டதாம்.

Demonetisation effect: Thieves have nothing to rob

இதுகுறித்து குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் சரத் சந்திரா கூறுகையில், ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முன்பு சராசரியாக தினசரி 8 முதல் 10 வழக்குகள் வரை பதிவாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை மொத்தமே 4 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன.

கடந்த வாரத்தில் ஒரே ஒரு கொள்ளைச் சம்பவம்தான் நடந்துள்ளது. வழக்கமாக வாரத்திற்கு 3 கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறும் என்றார் அவர்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் மக்களிடையே பணப் புழக்கம் வெகுவாகு குறைந்து போய் விட்டது. பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் திருடர்களுக்கும் தொழில் புட்டுக்கிட்டது போல!

English summary
Bengaluru has seen a steady decline in number of cash related crimes over the last week. The city police is viewing it as an effect of demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X