For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமதிப்பிழப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

Demonetisation is a direct attack on Indian finance says Rahul Gandhi

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக பலர் மரணம் அடைந்தனர். இதனால் தற்போது எந்த விதமான பலனும் ஏற்படவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 99.3 சதவிகித நோட்டுகள் மீண்டும் வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மக்களிடம் இதுகுறித்து விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல. அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே

பிரதமர் மோடிக்கு அம்பானி அதானி உடன் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு இவர்கள் உதவுகிறார்கள். அவர்களுடனான உறவு குறித்து மோடி விளக்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

English summary
Demonetisation is a direct attack on Indian finance says Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X