For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சம் கூட யோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவு பண மதிப்பிழப்பு: குமுறும் ப.சிதம்பரம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொஞ்சம் கூட யோசிக்காமல் கொண்டு வரப்பட்டு இருக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஆண்டு நவம்பரில் டிமானிடைசேஷன் எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திடீர் என்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ருபாய் நோட்டுகள் செல்லாமல் போயின.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்து ஒரு வருடம் முடிந்ததை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டிவிட்டரில் நிறைய குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொஞ்சம் கூட யோசிக்காமல் கொண்டு வரப்பட்டு இருக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் மக்களை இந்த நடவடிக்கை பெரிய அளவில் கஷ்டப்படுத்தியது என்று கூறியிருக்கிறார்.

திடீர் முடிவு

பண மதிப்பிழப்பு குறித்து மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம், தனது டிவிட்டில் "இந்த அவசரமான முடிவால் இந்திய பொருளாதாரம் சாய்ந்தது. கோடிக்கணக்கான இந்திய மக்களை இந்த நடவடிக்கை வறுமையில் தள்ளியது'' என்றார்.

கள்ளநோட்டு

பண மதிப்பிழப்பு குறித்த கணக்கு ஒன்றை வெளியிட்டுள்ளார் சிதம்பரம். அதில் "இந்த நடவடிக்கை காரணமாக 15,28,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்திருக்கிறது. அதில் ரூ. 41 கோடி கள்ளநோட்டு. இதற்குத்தான் இவ்வளவு பெரிய மோசமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எதுவும் நடக்கவில்லை

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "கணக்குகளின் படி இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவில்லை என்று தெரிகிறது. இன்னும் நாட்டில் கருப்பு பண புழக்கம் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் இல்லை

தனது கடைசி டிவிட்டில் மிகவும் கோபமாக எழுதி இருக்கும் ப.சிதம்பரம் அதில் "எந்தத் ஒரு அரசுக்கும் தங்கள் மக்களை கஷ்டப்படுத்த உரிமை கிடையாது. அரசாங்கம் என்பது கஷ்டப்படுத்தாத ஒன்றாக இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Former central minister P. Chidambaram tweeted that, 'Demonetisation was a thoughtless and rash decision that turned out to be a colossal mistake and imposed a huge cost in terms of denting economic growth and heaping misery on millions of ordinary people.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X