For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அந்த' விஷயத்துக்கு மறுத்து அடம்பிடித்த மனைவி- கணவருக்கு டைவர்ஸ்: டெல்லி ஹைகோர்ட்! #divorce

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மனைவி நீண்டகாலம் உடலுறவுக்கு மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

ஹரியானா மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனாலும் சில ஆண்டுகளாக உடலுறவுக்கு மனைவி மறுத்து வந்துள்ளார்.

இத்தனைக்கும் ஒரே அறையில் இருந்தபோதும் கணவரின் அழைப்பை மனைவி நிராகரித்திருக்கிறார். இதனால் கணவர் வெறுத்து போய் வேறுவழியே இல்லாமல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார்.

ஹைகோர்ட்டில் முறையீடு

ஹைகோர்ட்டில் முறையீடு

ஆனால் கீழ்நீதிமன்றம் கணவரின் மனுவை ரத்து செய்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதிரடி தீர்ப்பு

அதிரடி தீர்ப்பு

இந்த மனுவை நீதிபதிகள் பிரதீப் நந்திரஜாக், பிரதீபா ராணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தது. அதில், ஒரே வீட்டில் கணவன்- மனைவி ஒன்றாக வசித்து வந்தாலும், மனைவி நீண்டகாலம் தாம்பத்ய உறவுக்கு மறுத்து வந்து இருக்கிறார்.

நியாயப்படுத்த முடியாது

நியாயப்படுத்த முடியாது

இத்தனைக்கும் மனைவிக்கு எந்த உடல்கோளாறும் கிடையாது. அப்படி இருந்தும் தாம்பத்ய உறவுக்கு அவர் மறுத்து இருக்கிறார். இதனால் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளார். இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

டைவர்ஸ்

டைவர்ஸ்

நீண்ட காலம் தாம்பத்ய உறவுக்கு மறுத்ததால் அது வாழ்க்கைத் துணைக்கு மிகுந்த மன வேதனையையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, இந்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

English summary
Delhi High Court has said denying sex to husband for a long time without any justification amounts to mental cruelty and is a ground for divorce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X