For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு விஷயம் இருக்கா?.. நிர்மலா சீதாராமன் பயணித்த போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் விமான படை நிலையத்தில் இருந்து அவர் பயணம் செய்துள்ளார்.

அவர் சுகோய் 30எம்கேஐ விமானத்தில் பறந்து இருக்கிறார். இந்த விமானத்திற்கு நிறைய சிறப்பம்சங்கள் இருக்கிறது.

பார்க்க மிகவும் சிறய விமானம் போல இருந்தாலும் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்திய விமானப்படையின் 'கெத்து' விமானங்களில் இதுவும் ஒன்றாகும்.

எங்கு உருவானது

எங்கு உருவானது

இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகி இருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம் இதை உருவாக்கி இருக்கிறது. ரஷ்யாவின் சுகோய் 30 விமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறியது

சிறியது

இதில் இரண்டு என்ஜின்கள் மட்டுமே இருக்கும். அதேபோல் இரண்டு பேர் மட்டுமே உட்கார முடியும். 2004ம் ஆண்டு இந்திய விமான படையில் இது சேர்ந்தது. தற்போது 214க்கும் அதிகமான சுகோய் 30 எம்கேஐ விமானம் இந்திய விமான படையிடம் இருக்கிறது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த விமானம் சிறியதாக இருந்தாலும் நிறைய சிறப்பம்சம் கொண்டது. இது அணு ஆயுதத்தை தாங்கி செல்ல கூடியது. எதிரி நாட்டிற்குள் மிக எளிதாக உட்புறம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது இது. 2,100 கிமீ/நே வேகம் செல்லக்கூடிய அளவிற்கு வலிமையானது இது.

கெத்து

கெத்து

இந்த போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் பறந்ததற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. 2004க்கு பிறகு இந்தியா விமான படை பயன்படுத்திய முக்கியமான விமானம் இது மட்டுமே,. இதுவே அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே போர் வரும் பட்சத்தில் விமான படையிடம் இருக்கும் 214 சுகோய் ரக விமானமும் முதல் ஆளாக களம் இறங்கும்.

English summary
Defence Minister Nirmala Sitharaman flies in Sukhoi 30 MKI. It is a 2 seater twin engine jet. It is atomic powered fighter jet. She flies from an air base in Jodhpur, Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X