For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது- தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என தேவஸ்வம் போர்டு திட்டவட்டமாக தெரிவித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

 Devaswom board says that we canno admit ladies in Ayyappan temple

அப்போது நீதிபதி கூறுகையில், இறை வழிபாட்டில் ஆண் பெண் என பாகுபாடு பார்க்கக் கூடாது. வழிபாடு நடத்த ஆண்களை போல் பெண்களுக்கும் உரிமை உள்ளது. பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிபதி வாதிட்டார்.

அப்போது கோயில் நிர்வாகம் கூறுகையில் மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் புனிதம் பாதிக்கப்படும். எனவே அவர்களை அனுமதிக்க இயலாது என்று கூறியது.

English summary
Thiruvithancore Devaswom board clearly says that it cannot allow the ladies between the age group 10 to 50 inside the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X