For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்தான் மனுஷன்.. என்ன ஒரு பெருந்தன்மை.. மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா.. வைரல் டிவிட்!

போகிபீல் பாலத்தை கட்ட உதவிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் , வாஜ்பாய் ஆகியோருக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா நன்றி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா, வைரல் டிவிட்!

    கவுகாத்தி: அசாமில் போகிபீல் பாலத்தை கட்ட உதவிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் , வாஜ்பாய் ஆகியோருக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா நன்றி தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

    பிரதமர் மோடி நேற்று போகிபீல் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

    அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான ரயில் பாலம் ஆகும். இதுகுறித்து தற்போது முன்னாள் பிரதமர் தேவ கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் தேவ கவுடா

    முன்னாள் பிரதமர் தேவ கவுடா

    முன்னாள் பிரதமர் தேவ கவுடாதான் இந்த பாலத்தின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது. 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா போகிபீல் பாலத்திற்கு அதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் 2014 வரை 80 சதவிகித பணிகள் நடந்தது. மோடி பிரதமர் ஆன பின் 20 சதவிகித பணிகள் முடிந்து நேற்று பாலம் திறக்கப்பட்டது.

    அழைப்பு கிடையாது

    அழைப்பு கிடையாது

    ஆனால் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா இந்த திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தேவ கவுடா டிவிட்

    இந்த நிலையில் தேவ கவுடா இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ''போகிபீல் பாலம் முறையாக இணைக்கப்பட்ட இந்தியாவை குறிக்கிறது. வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது அரசின் கனவு திட்டத்திற்கு வடிவம் கொடுத்ததற்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

    மக்கள் வரவேற்பு

    மக்கள் வரவேற்பு

    இந்த நிலையில் மக்கள் தேவ கவுடாவின் டிவிட்டிற்கு வரவேற்பு அளித்துள்ளனர். என்னதான் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றாலும், எத்தனை பெருந்தன்மையோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படித்தான் பெருந்தன்மையோடு செயல்பட வேண்டும் என்று தேவ கவுடாவை பலர் பாராட்டி வருகிறார்கள்.

    கனவு திட்டம்

    தேவ கவுடா பிரதமராக இருந்த போதுதான், இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, பணிகள் தொடங்கப்பட்டது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.

    English summary
    Deve Gowda tweet thanking PM Modi and Manmohan Singh for Bogibeel Bridge construction may make your day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X