For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாசன் தொகுதியில் 5–வது முறையாக வென்ற தேவேகவுடா

By Mathi
Google Oneindia Tamil News

Devegowda own the fifth time in Hassan
பெங்களூர்: கர்நாடகாவின் ஹாசன் லோக்சபா தொகுதியில் 5-வது முறையாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெற்றி பெற்றார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சு, பா.ஜனதா சார்பில் விஜயசங்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஹாசன் தொகுதியில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று தேவேகவுடா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுவுக்கு 4 லட்சத்து 9 ஆயிரத்து 379 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் விஜயசங்கருக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 688 வாக்குகளும் கிடைத்தன.

ஹாசன் தொகுதியில் இருந்து ஏற்கனவே தேவேகவுடா 4 முறை கவுடா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அத்துடன் சேர்த்து 5-வது முறையாக அந்த தொகுதியில் தேவேகவுடா வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Prime Minister of India H.D. Devegowda won the Hassan constituency with a lead of 1 lac votes. The 81 year old parliamentarian sought re-election for the fifth time in the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X