For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவ்யானி விவகாரம்: அமெரிக்க தூதர்களின் அடையாள அட்டைகள் ரத்து!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Devyani
டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதர் தேவ்யானி கைது விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகளை ரத்து செய்துள்ளது இந்தியா.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதர் தேவ்யானி கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேவ்யானி மீதான வழக்கை கைவிட மறுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய தூதரகங்களில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கான சலுகைகளை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அடையாள அட்டைகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு வழங்குவதுபோல், இங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் இனி அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

English summary
The dispute between Washington and New Delhi over the arrest of an Indian diplomat in New York escalated today, with India taking steps to ensure that US consular officials here now have the same immunity as that offered to their Indian counterparts in America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X