For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தலில் தேவ்யானி கோப்ரகடே போட்டி : எந்தக் கட்சி என்பது விரைவில் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் தேவ்யானி. இவர் தனது பணிப்பெண்ணை அமெரிக்கா அழைத்துச் சென்ற விவகாரத்தில் விசா மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் வைத்து இந்தியத் தூதர் கைது செய்யப் பட்டதால், அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் உண்டானது.

evyani Khobragade

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் தேவ்யானி. இந்நிலையில், அவரது தந்தை உத்தவ் கோப்ரகடே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப் பூர்வமாக தகவல் வெளியிடாமல் இருந்த உத்தவ், ‘ தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு இதுபற்றிய பேச்சு தொடங்கிவிட்டதாகவும், ஆனால் தான் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் தனது இரு மகள்களை அடுத்தமாதம் டெல்லி அழைத்து வர இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அங்குள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க இருப்பதாகவும் தேவ்யானி தெரிவித்துள்ளார்.

English summary
Uttam Khobragade, a retired IAS officer and father of diplomat Devyani Khobragade, said on Wednesday that he would contest the forthcoming Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X