For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்!

தங்கையை தோற்கடித்தது வருத்தமாக உள்ளதாக தனஞ்செய் முண்டே தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

பீத், மகாராஷ்டிரா: மகாராஷ்டிர தேர்தலில் தங்கை பங்கஜா முண்டேவை தோற்கடித்து அண்ணன் தனஞ்செய் முண்டே ஷாக் கொடுத்துள்ளார். இந்த வெற்றி சந்தோஷமாக இருந்தாலும் கூட குடும்ப உறுப்பினர் ஒருவரை தோற்கடித்தது வலியாக இருக்கிறது என்று தனஞ்செய் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முண்டே குடும்பத்தினர், பிரமோத் மகாஜன் குடும்பத்தினர், பவார் குடும்பத்தினர் ஆதிக்கம் பல காலமாகவே உள்ளது. இதில் கோபிநாத் முண்டே முக்கியமான பாஜக தலைவர். தற்போது மறைந்து விட்டார். இவரது மகள்தான் பங்கஜா முண்டே.

இவரது உறவினர், அதாவது அண்ணன் முறை வருபவர்தான் தனஞ்செய் முண்டே. இருவரும் மகாராஷ்டிர தேர்தலில் எதிரும் புதிருமாக நின்றனர். பார்லி சட்டசபைத் தொகுதியில் பாஜக சார்பில் பங்கஜாவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தனஞ்செய் முண்டேவும் போட்டியிட்டனர். போட்டி என்றால் சாதாரணமாக இல்லை.. மிகக் கடுமையாக மோதிக் கொண்டனர்.

ஹரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி- முதல்வராக கட்டார் நாளை பதவியேற்புஹரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி- முதல்வராக கட்டார் நாளை பதவியேற்பு

சர்ச்சை

சர்ச்சை

தேர்தல் பிரச்சாரத்தின்போது உறவினர் என்று கூட பாராமல் பங்கஜாவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் தனஞ்செய். இது அனைவரையும் அதிர வைத்தது. முகம் சுளிக்கும் வகையில் இப்படி பேசலாமா என்ற சர்ச்சை கூட எழுந்தது. ஆனால் பங்கஜா அதைக் கண்டு கொள்ளவில்லை. இது ஆபாச அரசியல் என்று சொல்லிவிட்டு அதை புறம் தள்ளி விட்டு செயலாற்றினார்.

பேட்டி

பேட்டி

ஆனால் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தனஞ்செய் ஜெயித்து விட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பங்கஜா தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல் கதறி அழுது விட்டார். தனஞ்செய்யும் கூட இந்த வலியை உணர்ந்து இப்போது பேட்டி அளித்துள்ளார்.

சந்தோஷம்

சந்தோஷம்

இதுகுறித்து அவர் கூறுகையில், வெற்றி சந்தோஷம் தருகிறது. ஆனால் குடும்ப உறுப்பினர் ஒருவரின் தோல்வி வருத்தம், வலி தருகிறது. எப்போதுமே நமது குடும்பத்தில் ஒருவருக்கு சோகம் என்றால் அது நிச்சயம் வலியாகத்தானே இருக்கும். அதிலும் நான் குடும்பத்தில் மூத்தவன் என்பதால் இளையவரின் தோல்வி வருத்தம் தருகிறது.

ஜெயித்துவிட்டேன்

ஜெயித்துவிட்டேன்

என்னதான் அரசியல் வந்து பிரித்தாலும் ரத்த உறவை யாராலும் பிரிக்க முடியாதே.. அது இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் பங்கஜாவின் வலியை உணர்கிறேன். அவரது தோல்வியால் வருத்தமடைகிறேன். பார்லி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த வெற்றியைப் பார்க்க எனது தந்தை இப்போது உயிருடன் இல்லை. அவரிடம் நான் ஜெயித்து விட்டேன் என்பதை எப்படிச் சொல்வேன் என்று வேதனையுடன் குறிப்பிட்டார் தனஞ்செய்.

உணர்வு போராட்டம்

உணர்வு போராட்டம்

உண்மைதான்... இவரது வெற்றியின் சந்தோஷத்தை அறிய இவரது தந்தை உயிருடன் இல்லை.. அதேபோல பங்கஜாவின் வேதனைக்கு ஆறுதல்கூற அவரது தந்தையும் உயிருடன் இல்லை. உணர்வுப் போராட்டம்தான் இது.

English summary
haryana and maharashtra election result 2019: Dhananjay Munde is pained over the defeat of his cousin Pankaja Munde
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X