For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்த தர்மேந்திர பிரதான்.. இளமைக்காலம், அரசியல் குறித்த பயோடேட்டா

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: தற்போது மீண்டும் மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள தர்மேந்திர பிரதான், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சேர் என்னுமிடத்தில் 1969-ம் ஆண்டு பிறந்தார். முன்னாள் பாஜக எம்.பி. டாக்டர் டெபெந்திர பிரதான், மகன் தான் இந்த தர்மேந்திர பிரதான் ஆவார்.

இவரது மனைவி மிருதுளா பிரதான் ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புவனேஸ்வரில் உள்ளஉட்கல் பல்கலைக்கழகத்தில் எம்ஏ மானுடவியல் படிப்பை முடித்துள்ளார்.

Dharmendra Pradhan, who has been reinstated in the Modi cabinet, has been a biodata of politics and youth

அவரது கல்லூரி நாட்களிலேயே தர்மேந்திர பிரதானிடம் தலைமைப் பண்புகளை காண முடிந்தது. ஒரிசாவில் உள்ள தால்ஷர் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பாளராகப் படிக்கும்போது, ​​ மாணவர் சங்கத்தின் தலைவர் ஆனார்.

1985-ல் தர்மேந்திரா பிரதான் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) உறுப்பினராக சேர்ந்து அரசியல் வாழ்வில் காலடி எடுத்து வைத்தார்.
விரைவில் அவர்அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயலாளராகவும், பின்னர் பாரதிய ஜனதாவின் யுவா மோர்ச்சாவை அமைப்பின் தேசிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தர்மேந்திர பிரதான் யுவா மோர்ச்சா தலைவராக இருந்த சமயத்தில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சாரங்களில் பங்கேற்றார். தர்மேந்திர பிரதான் 2004 ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் நுழைந்தார். பிரதானின் தந்தை வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர் ஆவார். தனது மகனபான தர்மேந்திர பிரதானுக்கு வழி விட்டு அவர் போட்டியிட்ட தொகுதியை மகனை போட்டியிட வைத்தார்

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மமேந்திர பிரதான், அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்தார். பிரதான் தனது அரசியல் வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளார். அவர் 1998-ம் ஆண்டு மாநில சட்டசபை உறுப்பினராக இருந்தபோது, அவர் சங் பரிவார் அமைப்பின் இளமுகமாக அறியப்பட்டார்

கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் ஒடிசாவில் கட்சி நடவடிக்கைகளின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற விருதையும் பெற்றுள்ளார். பாஜ கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தபோது ஜார்கண்ட் மாநில கட்சி நடவடிக்கைகளை கவனித்தார். பின்னர் 2012ல் பீகார் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2014 ம் ஆண்டு மோடி ஆட்சியின் போது தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான அமைச்சராக பதவி ஏற்றார். இடையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றங்களின் போது தர்மேந்திர பிரதானுக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது

இந்நிலையில் ராஜ்யசபா பதவி 2018ல் நிறைவுற்றதை அடுத்து மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு மீண்டும் தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக பதவி வகித்தார். தற்போது மீண்டும் மோடி ஆட்சியமைந்துள்ள நிலையில் மீண்டும் பிரதானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Dharmendra Bhattan was born in 1969 in Thalasser in Orissa state. Former BJP MP Dr. Debendra Bhattan is the son of Dharmendra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X