For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ மை காட்.. இவ்வளவு கோடி வருமான வரியா?.. கூல் தோனியை பாராட்டும் வரித்துறை!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இவ்வளவு கோடி வருமான வரியா?..கூல் தோனியை பாராட்டும் வரித்துறை!- வீடியோ

    டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மொத்தம் 12.17 கோடி ரூபாய் வருமான வரி கட்டி இருக்கிறார்.

    அவரின் இந்த செயலுக்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்து இருக்கிறது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், பிரபலங்கள் அதிக வருமான வரி செலுத்துவது வழக்கம்.

    சிலர் இந்த மாதிரி வரி செலுத்தாமல் சமயங்களில் பிரச்சனையில் சிக்கி வருவதும் வழக்கம். இந்த நிலையில் தோனி செலுத்திய வருமான வரி விவரம் வெளியாகி உள்ளது.

    தோனி சம்பளம்

    தோனி சம்பளம்

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். கிரிக்கெட் போட்டி மூலம் மட்டும் அவர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இது இல்லாமல் ஐபிஎல், விளம்பரம், கார், பைக் ஒப்பந்தம் என்று பல விதமான வருமானங்களை வாங்கி வருகிறார்.

    எவ்வளவு சம்பளம்

    எவ்வளவு சம்பளம்

    தோனி வருடத்தில் 1 மில்லியன் டாலர் வரை சம்பளம் பெறுகிறார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் இவர் கோஹ்லி, ரோஹித்தை விட குறைவான அளவு சம்பளமே வாங்குகிறார்.

    கம்மிதான் பாஸ்

    கம்மிதான் பாஸ்

    தோனியை பிசிசிஐ அமைப்பு 'ஏ+' வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் காரணமாக தோனியின் சம்பளம், ஐசிசி ரேட்டிங் என நிறைய விஷயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மாறாக டோணி டெஸ்ட் போட்டியில் ஒய்வு பெற்றும் ஏ+ கிரேடில் விளையாடி வந்தார். தற்போது சில வீரர்களின் அழுத்தத்தின் காரணமாக அவர் ஏ+ கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதனால் அவருக்கு வருமானம் குறைவு.

    கூல் நேர்மை

    கூல் நேர்மை

    ஆனாலும் இவர் வருமான வரி கட்டுவதில் நேர்மையாக இருக்கிறார்.தோனி, கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 12.17 கோடி ரூபாய் வருமான வரி கட்டி இருக்கிறார். இதனால் பீகார் மற்றும் ஜார்கண்ட் பிராந்தியத்தில் அதிக வரி செலுத்தி இருக்கிறார். இதனால் அவரை வருமான வரித்துறை பாராட்டியுள்ளது.

    English summary
    Dhoni pays very high amount Tax in last year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X