For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர்- ஜார்க்கண்ட் தேர்தல்: பெட்ரோல்- டீசல் விலை மேலும் ரூ.2.50 குறைப்பு?; விரைவில் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடைசியாக பெட்ரோல் விலை கடந்த 14ஆம் தேதி லிட்டருக்கு ரூ1.28 குறைந்தது. டீசல் விலை கடந்த 18ஆம் தேதி ரூ.3.37 குறைந்தது.

Diesel & petrol prices likely to be cut by Rs 2.50/litre ahead of assembly elections

கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு மாதமும் சுமார் 0.50 பைசா வரை டீசல் விலை உயர்த்தப்பட்டது. டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதால், இனி டீசல் விலையும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படுகிறது.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மத்திய அரசு நாளை முடிவெடுக்க உள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தேர்தல் நடைமுறைகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Diesel and petrol are likely to be cheaper by about Rs 2.50 a litre soon, which would dampen inflation as diesel rates would be down 11% in less than two weeks, and cheer consumers ahead of assembly elections in Jharkhand and Jammu & Kashmir, government and industry sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X