For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.பரமேஷ்வரா அம்மாநில துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

Dinesh Gundurao appoints as President of the Karnataka Pradesh Congress Committee

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் தென் கர்நாடகாவின் பொறுப்பாளராக இருந்தார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் இடையே அமைச்சரவை அமைப்பதில் குழப்பம் நிலவிய போது தினேஷ் குண்டுராவ் தனக்கு அமைச்சரவையில் இடம் இல்லாதபோதும் அமைதி காத்தார்.

அதோடு கட்சியில் பிரச்சனை செய்தவர்களையும் சமாதானப்படுத்தினார். இவர் காந்திநகர் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019 லோக் சபா தேர்தலை கருத்தில் கொண்டு இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் துணை தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்ற கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தார். இவர் பால்கி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

English summary
Congress President Rahul Gandhi appoints Dinesh Gundurao as President of the Karnataka Pradesh Congress Committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X