For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய உளவு அமைப்பான ஐ.பி-யின் புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மா?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மா நியமிக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி. அமைப்பின் தலைவராக உள்ள சையத் ஆசீப் இப்ராகிமின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஐ.பி.யில் தலைவர் பதவி வகித்த முதலாவது இஸ்லாமியர் சையத் ஆசீப் இப்ராகிம்.

லண்டனில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய சையத் ஆசீப் இப்ராகிம், ஐபியில் சிறப்பு இயக்குநராக பணியாற்றினார். ஐ.பி. தலைவராக இருந்த நேச்சால் சாந்து ஓய்வு பெற்றதால் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Dineshwar Sharma to be new chief of Intelligence Bureau

மத்திய பிரதேச கேடரைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சைத் ஆசிப் இப்ராகிம் இம்மதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து புதிய ஐ.பி. தலைவராக கேரளா கேடரைச் சேர்ந்த 1979 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தினேஷ்வர் ஷர்மாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவரது சொந்த மாநிலம் பீகார்.

தினேஷ்வர் ஷர்மாவை ஐ.பி. தலைவராக நியமித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Senior Indian Police Service (IPS) officer Dineshwar Sharma will be the appointed the director of the Intelligence Bureau (IB), a government official privy to the information said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X