For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவையே புரட்டி போட்ட 4 வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேற்றுடன் குட்பை சொன்னார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் அவருக்கு நேற்றைய தினமே பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் குட் பை சொன்ன மிஸ்ராவை யாராலும் மறக்க முடியாது. செப்டம்பர் மாதத்தில் முக்கியமான 4 தீர்ப்புகளை வழங்கினார். இந்த தீர்ப்புகள் நாட்டியை புரட்டி போட்டன.

[ நிலநடுக்கத்தால் இடிந்த இந்தோனேஷிய சிறைகள்.. 1200 கைதிகள் தப்பியோட்டம்! ]

சட்டம் நீக்கம்

சட்டம் நீக்கம்

இந்தியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 377 பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி ஓரின சேர்க்கை குற்றமா என்பது குறித்த வழக்கின் மீது தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாடினர்.

அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

அரசு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

வங்கிச் சேவை, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தகாத உறவு குற்றமல்ல

தகாத உறவு குற்றமல்ல

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 497-இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பெண்களுக்கு எந்த தண்டனையும் வழங்குவதில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கள்ளக்காதல் குற்றமல்ல என்று கூறியதுடன் 497 சட்டபிரிவை ரத்து செய்தது.

முக்கிய தீர்ப்பு

முக்கிய தீர்ப்பு

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சபரிமலைக்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. இத்தகைய 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ளார் தீபக் மிஸ்ரா.

English summary
CJI Dipak Misra gets retirement from his service with 4 important judgements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X