For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தன் தவறை மறைக்க நாடகமாடுகிறார் டெல்லி ஐஐடி இயக்குநர்.. சாமி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: தன் மீதான தவறை மறைக்க ராஜினாமா நாடகமாடியுள்ளார் டெல்லி ஐஐடி இயக்குநர் ரகுநாத் கே. செவ்கோங்கர் என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமிக்கு ரூ 70 லட்சம் சம்பளப் பாக்கியைத் தருமாறு நெருக்கடி வந்ததால்தான் செவ்கோங்கர் ராஜினாமா செய்ததாக ஒரு தகவல் வெளியானது. இதற்கு சாமி டிவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். உண்மையில் தவறு செய்தவர் செவ்கோங்கர்தான். ஆனால் அவர் பிறர் மீது பழி போட்டு தனது தவறை மறைக்கப் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

Director of IIT Delhi Resigns, Swamy, Government deny charges

இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில் மொரீஷியஸில் ஐஐடியின் வளாகத்தை இன்னொரு நிறுவனத்தின் பெயரில் ஏற்படுத்தியுள்ளார் செவ்கோங்கர். இதற்காக அவர் 2011ம் ஆண்டு மொரீஷியல் சென்றார். ஆனால் தான் செல்வது குறித்து அவர் அரசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அவரிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. அவரது செயல் விதி மீறல் என்பதால் அரசே அவரை பதவிநீக்கம் செய்ய முடியும். ஆனால் அதிலிருந்து தப்ப ராஜினாமா நாடகம் ஆடியுள்ளார் செவ்கோங்கர். அரசியல் காரணம் என்று பிறர் மீது பழி போடுகிறார்.

உண்மையில் எனது சம்பளப் பாக்கி விவகாரம் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை. மாறாக தன் மீதான நடவடிக்கையிலிருந்து தப்பவே விலகியுள்ளார் என்று கூறியுள்ளார் சாமி.

மத்திய அரசும் மறுப்பு

இந்த நிலையில் நிலையில் செவ்கோங்கர் விலகல் தொடர்பாக கூறப்படும் காரணங்கள் தவறானவை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை விளக்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், செவ்கோங்கர் விலகலுக்கான காரணமாக செய்திகளில் வெளியாகியுள்ள காரணங்கள் சரியானவை அல்ல. அது தவறானது. சச்சின் டெண்டுல்கர் யாரிடமும் நிலம் கேட்கவும் இல்லை. அவருக்கு நிலம் ஒதுக்குமாறு அமைச்சகமும் யாரையும் கேட்டுக் கொள்ளவும் இல்லை. எந்த உத்தரவையும் அமைச்சகம் பிறப்பிக்கவும் இல்லை. யாருக்கும் நெருக்கடி தரவும் இல்லை.

அதேபோல சாமியின் கோரிக்கையை டெல்லி ஐஐடிக்கு அமைச்கம் பரி்ந்துரைக்கவும் இல்லை. இதுதொடர்பாக எந்த உத்தரவையும் அது பிறப்பிக்கவும் இல்லை.

டிசம்பர் 26ம் தேதியிட்ட செவ்கோங்கரின் விலகல் கடிதம் அமைச்சகத்திற்கு வந்துள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர்தான் தர வேண்டும். எனவே குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Subramanian Swamy has alleged the resignation of Delhi IIT directorm was not over the alleged demands by HRD Ministry for payment of his dues but involved an IIT campus in Mauritius, reported news agency Press Trust of India. "The Director was found to have gone to Mauritius in 2011 without telling the Government of India and set up an institute in the name of an affiliate, so an explanation was asked from him," PTI quoted him as saying. In order to hide the fact which would have meant termination of his directorship, "he tried to make political capital of it," Swamy alleged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X