For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி ராகுல் காந்தியிடம் பேசினேன்.. பா.ரஞ்சித் டிவிட்

நாட்டில் நிலவும் ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு- வீடியோ

    டெல்லி: நாட்டில் நிலவும் ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு நடத்தி இருக்கிறார். டெல்லி சென்று இருக்கும் பா.ரஞ்சித் ராகுல்காந்தி இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறார்.

    Director P.Ranjith tweets about his meeting with Rahul Gandhi

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கும்படி ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

    இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது.ராகுலை சந்தித்த பின் அந்த சந்திப்பு குறித்து பா. ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முக்கியமான விஷயங்களை பேசினேன். நம் மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் இருக்கும் ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து பேசினேன். சந்திப்பிற்கு நன்றி. நம்முடைய உரையாடல்கள் செயல்வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு தேசிய தலைவர் மாற்று கருத்துள்ளவர்களுடன் பேசுவது உற்சாகம் அளிக்கிறது, என்றுள்ளார்.

    English summary
    Director P.Ranjith meets Congress Cheif Rahul Gandhi in his residence. Ranjith tweets, My meeting with @RahulGandhi abt politics&art.Discussed caste&religious bias threatening d core of our secular constitution.Thks for having me over Sir.Lookin forward for our discussion taking shape.A national leader engaging with ppl from all ideologies is very encouraging!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X