For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கியூட் வேதிகா குட்டி.. மாவட்ட கலெக்டர் மகள்.. அரசுப் பள்ளியில் படிக்கிறாள்.. ஆச்சர்யத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டராக பணியாற்று வரும் அவனிஷ் ஷரன் தனது குழந்தையை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். இதை கண்டு ஆச்சர்யம் அடைந்த சதீஸ்கர் மக்கள் பலரும் கலெக்டரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இன்றைய சூழலில் கூலி வேலை செய்பவர்கள் முதல் கோடீஸ்வர்கள் வரை தங்கள் பிள்ளைகள் புகழ் பற்ற தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

district Collector child joined govt school in Chhattisgarh

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தால் தான் உயர்ந்த நிலையை தங்கள் பிள்ளைகளால் எட்ட முடியும் என உறுதியாக நம்புகிறார்கள். இதற்காக லட்சங்களை கொட்டி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை சேர்ந்துள்ளார். 2009ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் அவனீஸ் ஷரன். இவர் சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். அவனீஸ் தனது குழந்தை வேதிகா ஷரனை அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் சேர்த்து இருக்கிறார். தனது மகள் அரசு பள்ளியில் சீருடையில் இருக்கும் புகைபடங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

district Collector child joined govt school in Chhattisgarh

இதனை பார்த்த சத்தீஸ்கர் மக்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அவனிஷ் ஷரனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உங்களை போல் எல்லா அரசு அதிகாரிகளும் முடிவு எடுத்தால் நிச்சயம் அரசு பள்ளிகளின் தரம் என்றும் உங்கள் முடிவு பாராட்டுக்கு உரியது என்றும் என்று வாழ்த்தி உள்ளனர். ஒருவர் உண்மையில் உங்கள் செயல்பாடு உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வுகள் நடப்பது அரிது என்று வியந்து பாராட்டிஉள்ளார்.

English summary
Chhattisgarh Kabirdham Collector Awanish Sharan's child joined govt school
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X